மீட்டியாகொட கொலை தொடர்பில் நால்வர் கைது

மீட்டியாகொட கொலை தொடர்பில் நால்வர் கைது

by Staff Writer 27-01-2021 | 4:07 PM
Colombo (News 1st) மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற 24 வயதான ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வருகை தந்த 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் வாள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.