சில கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்வு

சில கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்வு

சில கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்வு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2021 | 10:11 am

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (27) அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தின் போகஹவத்த, பமுனுமுல்ல, கொலமெதிரிய, கொரவெல, அட்டலுகம கிழக்கு, அட்டலுகம மேற்கு, எபிட்டமுல்லை, கல்கெயமன்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (27) அதிகாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டன.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மோரகல கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று (27) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்