கொரோனா நோயாளர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் ஆலோசனைக் கோவை 

கொரோனா நோயாளர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் ஆலோசனைக் கோவை 

கொரோனா நோயாளர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் ஆலோசனைக் கோவை 

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2021 | 6:16 pm

Colombo (News 1st) கொரோனா நோயாளர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனைக் கோவை ஒன்றை வௌியிட்டுள்ளது.

* COVID – 19 தொற்றுக்குள்ளானவர்களின் பிறபொருளெதிரி அழிவடைந்திருந்தால் அதனை தனிமைப்படுத்தலின் போது மீளுருவாக்க முடியும்.

* நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்களை தனிமைப்படுத்தி, முன்னேற்றம் ஏற்பட்டால் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு 10 நாட்களின் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து விடுவிக்க முடியும்.

* அவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வௌியேறியவர்கள் மேலும் 4 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

* முதியோர் இல்லங்கள், ஹோட்டல் மற்றும் சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்கள் 10 ஆவது நாளின் பின்னர் 4 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே இருக்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்