ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது – நெதர்லாந்து அரசு

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது – நெதர்லாந்து அரசு

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது – நெதர்லாந்து அரசு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2021 | 12:49 pm

Colombo (News 1st) நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

COVID – 19 கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் வன்முறை போராட்டங்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்த போதிலும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

Rotterdam உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் கடைகள் கொள்ளையிடப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகள் கறைபடிந்தவையென நெதர்லாந்து நிதியமைச்சர் Wopke Hoekstra தெரிவித்தார்.

வன்முறைகளில் ஈடுபட்ட 180 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, போராட்டம் செய்வதற்கான அடிப்படை உரிமைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த வன்செயல்கள் நீடிக்காது என நெதர்லாந்து பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்