தேசிய சொத்துக்களை பாதுகாக்க தொடர்ந்தும் போராடுவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Staff Writer 26-01-2021 | 7:57 PM
Colombo (News 1st) தேசிய சொத்துக்களை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் போராடி வருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிராக அன்றிருந்த அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் இருப்பதாக நாமல் ராஜபக்ஸ கூறினார்.
அரசாங்கம் என்ற வகையில், அமைச்சரவையில் ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். அத்துடன், அனைத்து விடயங்களையும் ஆராய வேண்டும். இந்நாட்டு மக்களின் இதயத்துடிப்பை புரிந்துகொள்ள வேண்டும். ​தேசிய தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும் போது, நாம் ஒன்றாக வௌியில் இறங்கி போராடினோம். அது மாத்திரமின்றி சிறைக்கும் சென்றோம். தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்கு நாம் போராடியமையினால் அந்த நிலைமை ஏற்பட்டது. எனினும், அன்று துறைமுகத்தை முழுமையாக விற்கும் போது மௌனமாக இருந்தவர்கள், தற்போது முனையம் தொடர்பில் பேசுகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பது தேசிய சொத்தில்லையா என்று நாம் அவர்களிடம் கேட்கின்றோம்
என நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.