ஐ.நா அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் பதில் இன்று

ஐ.நா அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் பதில் இன்று 

by Staff Writer 26-01-2021 | 7:56 AM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை இன்று (26) மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர், அத்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நியூஸ்பெஸ்ட்டின் விசேட நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை கூறினார். மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையே கிடைத்துள்ளதாகவும் அத்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் காணப்படும் தரவுகள், குறைபாடுகள், பிழைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது தனித்தனியாக ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மிக ஆழமாக ஆராய்ந்ததன் பின்னர் அந்த அறிக்கைக்கான பதிலை இன்று மாலை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அத்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே கூறினார். இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படும் பதில் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அதனை பேரவை கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார் எனவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர், அத்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.