நாளாந்தம் 20,000 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாளாந்தம் 20,000 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாளாந்தம் 20,000 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2021 | 7:11 am

Colombo (News 1stt) நாளாந்தம் சுமார் 20,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நாளொன்றில் 10,000 PCR பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 40 வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

5 தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, கேகாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை கூடத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்