உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிச்டென்ஸ்டயினுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கை

உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிச்டென்ஸ்டயினுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கை

உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிச்டென்ஸ்டயினுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கை

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2021 | 7:14 pm

Colombo (News 1st) ஐரோப்பாவின் மிகச் சிறிய நாடாக கருதப்படும் லிச்டென்ஸ்டயின் (Liechtenstein) நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஐரோப்பாவின் நான்காவது சிறிய நாடான லிச்டென்ஸ்டயினின் மொத்த சனத்தொகை 32,000 மாத்திரமே.

160 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நாடு, இலவச வரிக் கொள்கையைப் பின்பற்றும் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பெரும் செல்வந்தர்களின் கொடுக்கல் வாங்கல்களின் இரகசியத்தன்மையையும் தனியுரிமையையும் பாதுகாக்கும் நாடாகவும் லிச்டென்ஸ்டயின் விளங்குகின்றது.

நாட்டின் சனத்தொகையை விட, அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் விசேட அம்சமாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்