10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2021 | 2:12 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் இன்று (25) காலை 06 மணியுடன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில கிராமங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கல்முனை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், கல்முனை வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1C, கல்முனை 1E, கல்முனை 2, கல்முனை 2A, கல்முனை 2B, கல்முனை 3A ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கல்முனை 1 (M.D), கல்முனைகுடி 1, கல்முனைகுடி 2, கல்முனை 3 (M.D) ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அம்பலாந்தோட்டை மெல்கொனிய கிராம சேவையாளர் பிரிவு, பூஜாபிட்டிய – பள்ளியகோட்டை மற்றும் கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியன இன்று (25) காலை 06 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்