ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2021 | 9:47 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் அத்துள்கோட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பதவிகளுக்காக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுவதுடன் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் ரஞ்சித் மத்தும பண்டார பதவி வகிக்கவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருலாளர் பதவி கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அமைப்பளராக திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், ராஜித்த சேனாரத்ன, குமார வெல்கம, கபீர் ஹஷீம், லக்‌ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் ரவீ சமரவீர ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தவிசாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உப தவிசாளர்களாக ஹரீன் பெர்னாண்டோ, தலதா அத்துகோறல, கயந்த கருணாதிலக்க, பீ.ஹரிசன், சுஜீவ சேனசிங்க, சந்திராணி பண்டார, திலீப் வெதஆரச்சி மற்றும் ஏ.எச்.எம்.ஹலீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை பிரதானியாக ஹரீன் பெர்னாண்டோவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஜித் பீ. பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி செயலாளர் பதவிக்கு நலின் பண்டார, அசோக் அபேசிங்க, ரோஹினி விஜேரத்ன மற்றும் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி தேசிய அமைப்பாளர்களாக ஜே.சி. அலவத்துவல, புத்திக்க பத்திரண மற்றும் ரஞ்சித் அளுவிஹாரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயலாளர் பதவிக்கு இரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர்களாக எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மனூஷ நாணாயக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்