by Bella Dalima 24-01-2021 | 4:33 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சி மூலம் இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் அவர் நடிக்க உள்ளாராம். மேலும், நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள். எ
படப்பிடிப்பு பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது.