வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது

by Staff Writer 24-01-2021 | 3:32 PM
Colombo (News 1st) வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (25) முதல் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலங்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.