பிரதமர் – சபாநாயகர் சந்திப்பு: பாராளுமன்ற அமர்வு தொடர்பில் கலந்துரையாடல்

பிரதமர் – சபாநாயகர் சந்திப்பு: பாராளுமன்ற அமர்வு தொடர்பில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2021 | 7:05 pm

Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொழும்பு விஜேராமயிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

COVID தொற்று சவாலுக்கு மத்தியில், எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பாராளுமன்ற நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ , சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்