தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2021 | 8:35 pm

Colombo (News 1st) தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நல்லூரில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

8 தமிழ் தேசியக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டம் நிறைவு பெற்றதும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

நில ஆக்கிரமிப்பு, கடல் வள சூறையாடல்கள், மீனவர்களின் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்பில் ஆராய்ந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்