தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2021 | 10:38 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில், கொழும்பு – வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவின் நசீர் தோட்டம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், வாரண விகாரை வீதி, கத்தொட்ட வீதி, ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பகுதிகளும், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் கல்ஒலுவ கிழக்கு, கல்ஒலுவ மேற்கு ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு கல்ஒலுவ பகுதியின் ஜூம்மா மஸ்ஜித் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, புதிய வீதி, அகரகொட ஆகிய பகுதிகள் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்