கொரோனா: இதுவரை 280 பேர் உயிரிழப்பு, 57,587 பேருக்கு தொற்று

கொரோனா: இதுவரை 280 பேர் உயிரிழப்பு, 57,587 பேருக்கு தொற்று

கொரோனா: இதுவரை 280 பேர் உயிரிழப்பு, 57,587 பேருக்கு தொற்று

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2021 | 2:35 pm

Colombo (News 1st) மேலும் இரண்டு பேரின் கொரோனா மரணங்கள் நேற்று (23) உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.

கல்கிசை பகுதியை சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவரின் மரணம் நேற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போது, நேற்று முன்தினம் (22) இவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ரனல்ல பகுதியை சேர்ந்த 82 வயதான பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
COVID -19 தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, 724 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 57,587 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 49,261 பேர் குணமடைந்துள்ள நிலையில், 8048 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ள கொரோனா தடுப்பூசியை விரைவாக பயன்படுத்த எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோய் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் அமல் ஹர்ஷ தெரிவித்துள்ளார்.

Oxford Astrazeneca தடுப்பூசியை விநியோகிப்பதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக சுகாதார தரப்பினருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் தடுபூசி ஏற்றப்படவுள்ளதாகவும் அமல் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு COVID-19 தடுப்பூசியை ஏற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்