கொக்கட்டிச்சோலையில் ஊஞ்சல் துணியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

கொக்கட்டிச்சோலையில் ஊஞ்சல் துணியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

கொக்கட்டிச்சோலையில் ஊஞ்சல் துணியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2021 | 6:19 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் ஊஞ்சல் துணியில் சிக்கி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, நேற்று (23) பகல் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மகிழடித்தீவு பகுதியை சேர்ந்த 9 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்