அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்

அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்

அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2021 | 4:23 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் (87) நேற்று (23) காலமானார்.

இதுகுறித்து அவரது ‘Ora Media’ ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக CNN தொலைக்காட்சி கடந்த 2-ஆம் திகதி தெரிவித்திருந்தது.

1950 மற்றும் 60-களில் வானொலி நெறியாளராக இருந்த லாரி கிங், பிறகு தொலைக்காட்சி நெறியாளராக புகழ்பெற்று விளங்கினாா்.

Peabody, Emmy விருதுகள் அடங்கலாக பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்