27 ஆம் திகதி COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

27 ஆம் திகதி COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jan, 2021 | 2:29 pm

Colombo (News 1st) எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை – வலல்லாவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அதற்கமைய, இந்தியாவில் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் COVID தொற்று ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேயிடம் வினவியபோது, இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca  தடுப்பூசியே எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார துறையினர், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட கொரோனா தடுப்பு செயற்பாட்டில் முன்னின்று செயற்படுவோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்