சட்டக் கல்லூரி பரீட்சை: தகைமைகளில் திருத்தம்

இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கான அடிப்படை தகைமைகளில் திருத்தம்

by Bella Dalima 23-01-2021 | 2:38 PM
Colombo (News 1st) இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தோற்றுவோருக்குரிய அடிப்படை தகைமைகள் திருத்தப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, க.பொ.த உயர்தர பரீட்சையில் திறமை சித்திகள் இரண்டும், சாதாரண சித்தி ஒன்றுடன் கூடிய பெறுபேறுகளைப் பெறுவது போதுமான தகுதி என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடக்கம் சட்டக்கல்லூரி அனுமதிக்கு இந்த தகுதி ஏற்றுக்கொள்ளப்படும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, பல்கலைக்கழக அனுமதிக்காக உயர்தர பரீட்சையில் 3 சாதாரண சித்திகளைப் பெற்றுக்கொள்தல் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வௌிநாட்டு பல்கலைக்கழகத்தில் சட்ட கற்கை நெறியை பூர்த்தி செய்வோருக்கு, விசேட தெரிவுப் பரீட்சை நடத்தப்பட்டதன் பின்னர், இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.