English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Jan, 2021 | 6:25 pm
Colombo (News 1st) நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட ஒரு சிறிய பாறைத் துண்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா அனுமதி அளித்துள்ளது.
ஜோ பைடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைத் துண்டு ஓவல் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், 1972 ஆம் ஆண்டில் நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட 332 கிராம் எடையுள்ள சிறிய பாறைத் துண்டை ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சிறிய துண்டு, நிலவின் அருகாமையில் கடைசியாக இடம்பெற்ற பெரிய தாக்க நிகழ்வின் போது உருவாக்கப்பட்டது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நிலவில் காலடி வைத்த கடைசி மனிதர்களான Apollo 17 விண்வெளி வீரர்கள், இந்த மாதிரியை நிலவின் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கின் ஒரு பெரிய கற்பாறையிலிருந்து எடுத்துக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்காலத்து மக்களின் இலட்சியங்களையும் சாதனைகளையும் அடையாளமாக அங்கீகரிக்கும் விதமாக நிலவின் பாறைத் துண்டு தற்போது ஓவல் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.
23 Feb, 2021 | 11:52 AM
27 Oct, 2020 | 02:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS