சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

23 Jan, 2021 | 4:10 pm

Colombo (News 1st) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுகாதார அமைச்சில் இதுவரை 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில், அமைச்சின் பிரிவொன்றில் 8 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதுடன், மற்றுமொரு பிரிவில் 4 பேர் அடையாளங்காணப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்