சில்லுக்கருப்பட்டி நடிகர் ஶ்ரீராம் மரணம்

சில்லுக்கருப்பட்டி நடிகர் ஶ்ரீராம் மரணம்

சில்லுக்கருப்பட்டி நடிகர் ஶ்ரீராம் மரணம்

எழுத்தாளர் Bella Dalima

23 Jan, 2021 | 6:55 pm

சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த ஶ்ரீராம் மரணமடைந்தார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான அந்தாலஜி படம் சில்லுக்கருப்பட்டி.

இதில் மூன்றாவது கதையில் லீலா சாம்சன் ஜோடியாக நவநீதனாக நடித்தவர் ஸ்ரீராம்.

தற்காப்பு கலையில் நிபுணரான ஶ்ரீராம், இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி வீழ்ந்து இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு ஶ்ரீராம் தற்காப்பு கலையை கற்பித்து வந்துள்ளார்.

தவிர, பெண்களின் பாதுகாப்பிற்கான பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஹலிதா ஷமீமின் சில்லுக்கருப்பட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்