Oxford-AstraZeneca தடுப்பூசிக்கு அனுமதி

Oxford-AstraZeneca தடுப்பூசிக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி

by Staff Writer 22-01-2021 | 3:08 PM
Colombo (News 1st) Oxford-AstraZeneca COVID-19 தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, இலங்கையின் அவசர பயன்பாட்டிற்கு Oxford-AstraZeneca தடுப்பூசியைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டதான சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதற்கமைய, விரைவில் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார். Oxford-AstraZeneca தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், விண்ணப்பங்கள் கிடைத்துள்ள ஏனைய சில தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.