by Staff Writer 22-01-2021 | 10:09 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 8 -ஐ சேர்ந்த 82 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா நோயாளராக அடையாளங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்றுநோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்டார். COVID-19 தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், ஹோமாகம பகுதியை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா நோயாளராக அடையாளங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். COVID-19 தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோயினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.