வலப்பனையில் இன்று அதிகாலை இலேசான நில அதிர்வு பதிவு

வலப்பனையில் இன்று அதிகாலை இலேசான நில அதிர்வு பதிவு

by Staff Writer 22-01-2021 | 2:35 PM
Colombo (News 1st) நுவரெலியா - வலப்பனை பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளது. 1.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. பல்லேகல, ஹக்மன மற்றும் மஹாகனுத்தராவ ஆகிய மத்திய நிலையங்களில் நில அதிர்வு பகுதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் ஆராய குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.