by Bella Dalima 21-01-2021 | 2:51 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொய் சாட்சியத்தை உருவாக்கி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டமை அடங்கலாக சில குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷானி அபேசேகர, எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மோஹன மென்டிஸ் மற்றும் ஓய்வுபெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் H.D. நவரத்ன ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் நான்காவது சந்தேகநபரான H.D. நவரத்ன பிரேமதிலக்கவிடம் மஹர சிறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.