தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 21-01-2021 | 11:07 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், வவுனியா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தின் பெர்குசன் (Ferguson) வீதி தெற்கு, கலகெதர கிழக்கு, வெலுவான வீதி, புனித அன்ட்ரூஸ் வீதி (முகத்துவாரம்), புனித அன்ட்ரூஸ் கீழ் மற்றும் மேல் வீதிகள் (முகத்துவாரம்), நஸீர் தோட்டம், ஶ்ரீ விஜயா வீதி (வௌ்ளவத்தை), கோத்தமிபுர 24 ஆம் தோட்டம், கோத்தமிபுர 78 ஆம் தோட்டம் அகிய கிராம சேகவர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன. அதேநேரம், கொழும்பு - கோத்தமிபுர வீட்டுத்திட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் ஹிரிபிட்டிய சுதந்திர மாவத்தை தெற்கு, வெடிக்கந்தை, வாரண விகாரை வீதி, கந்தொட்ட வீதி, ஹைட்ரா மாவத்தை (நிட்டம்புவ), மின்ஹாஜ் வீதி, தர்கா வீதி, பொல்ஹேன, குமாரி முல்லை, ஜுனிடே மாவத்தை (நிட்டம்புவ), கொதெல்ல, துனுஎல, 90 ஆம் தோட்டம், கிழக்கு கல்லொலுவ (மினுவாங்கொடை), மேற்கு கல்லொலுவ (மினுவாங்கொடை) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, களுத்துறை மாவட்டத்தின் அடலுகம கிழக்கு, அடலுகம மேற்கு, எப்பிட்டமுல்லை, போகஹவத்தை, கொரவல, கல்கேமந்திய, பமுனுமுல்லை, வெயாங்கல்ல மேற்கு, வெயாங்கல்ல கிழக்கு, மரிக்கார் வீதி, கொட்டவத்தை, வெலிப்பென்ன கிழக்கு வடக்கு முஸ்லிம் வீதி மற்றும் அக்கரைமலை (பயாகல) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் அமுலிலுள்ளது. கண்டி மாவட்டத்தின் பூர்ணவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் பூஜாபிட்டிய கிராம அதிகாரி பிரிவின் பமுனுபொல கொஸ்கொட கிராமம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தளை - வரக்காமுற (356), மிதெனிய (356 B), தெஹிபிட்டிய (356 A) - மாத்தாவ கிராமம் ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன. மாத்தறை - யோனாக்கபுர மேற்கு மற்றும் யோனாக்கபுர கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலின் கீழுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மொனராகலை - அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவு மாத்திரம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை 1, கல்முனை 1C, கல்முனை 1E, கல்முனை 2, கல்முனை 2A, கல்முனை 2B, கல்முனை 3, கல்முனை 3A, கல்முனைக்குடி 1, கல்முனைக்குடி 2, கல்முனைக்குடி 3 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலுள்ளது. குருநாகல் - கிரியுல்ல கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மும்மானை, வெத்தாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தின் AMT எரிபொருள் நிரப்பு நிலையம் தொடக்கம் தாண்டிக்குளம் வரையான பகுதி, நெரியகுளம் சந்தி தொடக்கம் A9 வீதி வரையான பிரதேசம், மமதுவ சந்தி தொடக்கம் A9 வீதி வரையான பகுதி மற்றும் பூந்தோட்டம் முதல் A9 வீதி வரையிலான பகுதி ஆகியன தொடர்ந்தும் முடக்கத்தில் உள்ளன. கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்பொல கிராம சேவகர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.