முதலாவது பெண் துணை ஜனாதிபதியானார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியானார் கமலா ஹாரிஸ்

by Staff Writer 21-01-2021 | 12:08 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதலாவது கறுப்பின பெண் என்ற பெருமையை 55 வயதான கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸிற்கு முதல் இலத்தீன் உயர் நீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றதை அடுத்து, துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ்