நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் வாக்குவாதம்

நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் வாக்குவாதம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2021 | 8:34 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – புத்தூர், நவகிரியில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.

புத்தூர் – நவகிரியில் நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதிக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இன்று சென்றிருந்தனர்.

இந்த நிலையில், அங்கு சென்ற அரசியல்வாதிகள் சிலர் புதிய நிர்மாணங்களை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

எனினும், இது தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடம் என்பதுடன், பராமரிப்பு நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்