கேகாலையில் தம்மிக்கவின் பாணி மருந்தை பெற மீண்டும் மக்கள் கூட்டம்

கேகாலையில் தம்மிக்கவின் பாணி மருந்தை பெற மீண்டும் மக்கள் கூட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2021 | 1:17 pm

Colombo (News 1st) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, கேகாலை தம்மிக்க நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணி இன்றும் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

கேகாலை – நெலும்தெனிய உடுகும்புற பகுதியிலுள்ள அவரின் வீட்டுக்கு அருகில் பாணி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று (21) காலை 9.30 மணி தொடக்கம் ஒன்றரை மணித்தியாலங்கள் பாணி பகிர்ந்தளிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடையாளம் இடப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் பாணியை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த நாட்களில் பணத்திற்கே இந்த பாணியை வழங்கிய போதும், இன்று இலவசமாக பாணி விநியோகிக்கப்பட்டதாக தம்மிக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்