அமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து

by Staff Writer 21-01-2021 | 12:32 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான உறவை சக்திமிக்கதாக்கி, எதிர்காலத்தில் செயலாற்ற எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது ட்விட்டர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.