சபையில் வாய்மொழி வினாக்களை மட்டுப்படுத்த தீர்மானம்

பாராளுமன்ற சபை அமர்வில் வாய்மொழி வினாக்களை மட்டுப்படுத்த தீர்மானம்

by Staff Writer 20-01-2021 | 8:24 AM
Colombo (News 1st) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (20) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய அமர்வின் போது ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரம் வாய்மொழி வினாக்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. ஏனைய நாட்களில் 15 கேள்விகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் இவ் வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை இரு நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய அமர்வின் போது முன்வைக்கப்படும் வாய்மொழி வினாக்களை பத்தாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய அமர்வின் போது சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க இந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தினை ஆரம்பித்து உரையாற்றவுள்ளார். அமைச்சர்களால் வௌியிடப்படும் அதிவிசேட வர்த்தமானிகளின் மூலம் விடுக்கப்படும் உத்தரவுகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை தொடர்பில் இன்றைய அமர்வின் போது விவாதிக்கப்படவுள்ளது.