கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 20-01-2021 | 10:51 AM
Colombo (News 1st) இன்று (20) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 669 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி தெரிவித்துள்ளது. அவர்களில் 09 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனைய 660 பேருள் அதிக தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 130 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 104 நபர்களும் கண்டி மாவட்டத்தில் 48 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 16 நபர்களும் வவுனியா மாவட்டத்தில் 26 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும் மன்னார் மாவட்டத்தில் 27 பேரும் யாழ். மாவட்டத்தில் ஐவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 09 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டையில் ஐவரும் நாரஹேன்பிட்ட பகுதியில் 26 நபர்களும் கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் ஐவரும் பொரளை பகுதியில் 09 பேரும் மருதானையில் 17 பேரும் புறக்கோட்டை பிரதேசத்தில் 09 பேரும் ஆட்டுப்பட்டித்தெரு பிரதேசத்தில் ஐவரும் கொட்டாஞ்சேனை பகுதியில் நால்வரும் மட்டக்குளி பகுதியில் 08 பேரும் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 130 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பிரசேத்தில் 21 நபர்களுக்கும் வத்தளை பகுதியில் 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தில் ஒருவர், சாய்ந்தமருது பகுதியில் 06 பேர், கல்முனை பகுதியில் நால்வர், உஹன பகுதியில் இருவர் மற்றும் தெஹியத்தகண்டி பிரதேசத்தில் மூவர் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கரடியனாறு பிரதேசத்தில் ஒருவர், காத்தான்குடி பகுதியில் 13 நபர்கள், வெல்லாவௌி பகுதியில் ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தில் 23 நபர்கள் அடங்கலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பிரசேத்திலேயே 4 தொற்றாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளனர். பதுளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய 05 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இன்று (20) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 54,419 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 46,594 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் நேற்றைய தினம் (19) 03 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், கொழும்பு - 06 பகுதியை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் மற்றும் அரநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் என மூவர் உயிரிழந்ததை அடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 269 இலங்கை பிரஜைகள் இன்று (20) நாடு திரும்பினர். இவர்கள் மாலைதீவு, கட்டார், சவுதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் வந்தடைந்துள்ளனர்.