டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2021 | 2:52 pm

Colombo (News 1st) டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுயதனிமையில் ஈடுபட்டிருந்த, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அவரை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டிக்கோயா வைத்தியசாலையின் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், டிக்கோயா வைத்தியசாலையின் நாளாந்த சிகிச்சைகள் வழமைபோல் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்