கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம்

கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம்

கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம்

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2021 | 11:38 am

Colombo (News 1st) கம்பளை – உடபுஸ்ஸல்லாவ – மடுல்ல பகுதியில் நபர் ஒருவர், சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கு சொந்தமான காணியிலுள்ள வேப்பமரத்தின் பட்டையை கழற்றியெடுத்தமை தொடர்பில் சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, சகோதரர் ஒருவர் பொல்லால் தாக்கியதை அடுத்து 50 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரால் தாக்கப்பட்ட அவரின் சகோதரி, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், உயிரிழந்த நபரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உடபுஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்