சிறிய தீவுகளில் எரிசக்தி தொகுதி நிறுவப்படவுள்ளது 

சிறிய தீவுகளில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம்

by Staff Writer 19-01-2021 | 4:58 PM
Colombo (News 1st) இலங்கையின் சிறிய தீவுகளில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் மின்சார வழங்கலில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு ஒத்துழைக்கும் கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இலங்கை மின்சார சபை இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மின்சக்தி வலயமைப்பின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக எரிசக்தி வளங்களை பயன்படுத்தி நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவுவதற்கு விலை மனு கோரப்பட்டுள்ளது. எனினும், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, சீனாவின் Sinosoar- Etechwin Joint Venture நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.