7000 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ திட்டம்

கிராமிய மட்டத்தில் 7000 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ திட்டம்

by Staff Writer 19-01-2021 | 7:13 AM
Colombo (News 1st) கிராம மட்டத்தில் சிறியளவில் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது. 4 வருடங்களுக்குள் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ முடியும் இலங்கை மின்சார சபையின் தலைவர், பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதனூடாக 100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.