English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 Jan, 2021 | 3:54 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதிக்கு தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து, ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.
இவ்வாறு தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன.
சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
05 Nov, 2021 | 03:52 PM
08 Dec, 2020 | 09:25 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS