ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடம்

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடம் - சட்ட மா அதிபர்

by Staff Writer 18-01-2021 | 10:34 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியான ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியதற்கு அமைய இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.