Colombo (News 1st) நாட்டில் இன்றைய தினம் (18) மேலும் கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
05 ஆண்களும் பெண்ணொருவரும் COVID - 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு - 03 பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணொருவர், நேற்று முன்தினம் (17) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - 15 பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான ஆணொருவர், கடந்த 15 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், கடந்த 14 ஆம் திகதி களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையை சேர்ந்த 63 வயதான மற்றுமொரு ஆண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, இரத்தினபுரியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றினால் நேற்று (18( உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (18) 627 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமைக்கு அமைய, நாட்டில் இதுவரை 53 750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.