நோய் எதிர்ப்பை வழங்கும் 10 ஔடதங்களுக்கு அனுமதி

நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் 10 ஔடதங்களுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

by Staff Writer 18-01-2021 | 4:49 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக கூறப்படும் 10 புதிய ஔடதங்களுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் விடயத்துக்கு பொறுப்பான குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நோய் எதிர்ப்பு பானம் என்ற வகையில் இந்த ஔடதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இதனூடாக கொரோனா தொற்றுக்கான விசேட நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படுகின்றதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார். இவ்வாறான புதிய 30 ஔடதங்கள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கேகாலை தம்மிக்க பண்டாரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட தம்மிக்க பாணி எனப்படும் ஆயுர்வேத ஔடதம், விடயத்துக்கு பொறுப்பான குழுவின் அனுமதியின் பின்னர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாயளர் நாயகம் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.