by Chandrasekaram Chandravadani 18-01-2021 | 4:59 PM
Colombo (News 1st) அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமாலாவில் தடியடி நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மீளவும் அவர்களை தாய்நாட்டுக்கே அனுப்புவதற்காக கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது.
ஹொண்டூரஸ் எல்லையிலுள்ள வீதியில் வைத்து ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கைகள், பாதுகாப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவொரு பாரிய சட்டவிரோத நடவடிக்கை என குவாத்தமாலா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
7000 புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் வருகை தந்துள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹொண்டூரஸை சேர்ந்தவர்களெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வறுமை மற்றும் வன்முறைகள் காரணமாக தாய்நாட்டிலிருந்து இவர்கள் புறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
குவாத்தமாலாவை தாண்டி மெக்ஸிக்கோவுக்குச் சென்று அதன்பின்னர் அமெரிக்க எல்லையை அடைவது இவர்களது இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.