பூநகரியில் பெண் ஒருவர் கொலை

பூநகரியில் பெண் ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2021 | 2:49 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பூநகரி தெளிகரை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 02 பிள்ளைகளின் தாயான 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்