இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி 

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2021 | 2:01 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அதன்பிரகாரம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 135 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டின் அபார இரட்டைச் சதத்துடன் 421 ஓட்டங்களை குவித்தது.

இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமான்ன சதம் விளாசியதுடன் 111 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் 359 ஓட்டங்களை பெற்றது.

அதன்பிரகாரம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றியிலக்கு 74 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 03 விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றைய ஐந்தாம் நாளில் வெற்றிக்காக மேலும் 36 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து வெற்றியிலக்கை கடந்தது.

ஜொன்னி பெயார்ஸ்ரோ 35 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தெரிவானார்.

டெஸ்ட் உ லக சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்த தொடர் நடத்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்