Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த களுத்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட சில பிரதேசங்கள் உடன் அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 725 களுத்துறை தெற்கு கிராம சேவகர் பிரிவு, 725 A களுத்துறை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 725 B வேலாபுர கிராம சேவையாளர் பிரிவு, 727 மஹவத்தை கிராம சேவகர் பிரிவு, 727 B குடா ஹீனட்டியன்கல - மபூர் சந்திரவங்கய பகுதி தவிர்ந்த ஏனைய பகுதி, 727 C கறுவாத்தோட்டம் கிராம சேவகர் பிரிவு, 727 E அக்கரகொடை கிராம அதிகாரி பிரிவு, 730 வெட்டுமக்கட தெற்கு கிராம சேவகர் பிரிவு, 730 A களப்புவ கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒரு பகுதி மற்றும் 730 B கட்டுகுருந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 743 A அக்கரமலை கிராம சேவையாளர் பிரிவிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
