மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Jan, 2021 | 2:30 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லொலுவ கிழக்கு மற்றும் கல்லொலுவ மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரக்காமுர (356), மீதெனிய (356 B) மற்றும் தெஹிப்பிட்டிய (356 A) (மாத்தாவ கிராமம்) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்துருவ – துன்தூவ கிழக்கு மற்றும் துன்தூவ மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்