சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல் 

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல் 

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல் 

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2021 | 1:56 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,500 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (16) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொழும்பு – தெமட்டகொடை – பேஸ்லைன் வீதி பகுதியிலேயே சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது 1,559 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கண்டி – மடவள மற்றும் வத்தளை – மாபோல பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தெமட்டகொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டிற்கு சட்டவிரோதமாக மஞ்சள் கொண்டு வரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேநேரம், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்