கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க நடவடிக்கை

கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க நடவடிக்கை

கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2021 | 1:43 pm

Colombo (News 1st) ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா (Oxford-AstraZeneca) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் COVID – 19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியை அடுத்த மாதம் நடுப்பகுதி முதல் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

இதனை தவிர கொவெக்ஸ் சலுகை ஊடாக, கொரோனா எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியும் இலவசமாக கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்