by Staff Writer 16-01-2021 | 2:25 PM
Colombo (News 1st) கம்பஹா - மிரிஸ்வத்தை பகுதியில் தனியார் நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 4 கோடி ரூபாவிற்கும் அதிக பணமும் தங்காபரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நேற்று (15) மாலை ஆயுதங்களைக் காட்டி ஊழியர்களை மிரட்டி இந்த கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.